- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர்
- அருண்ராஜ்
- சென்னை
- பொது சுகாதார அமைச்சர்
- ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை
சென்னை: சென்னை, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அவசர சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, கழிப்பறைகள் உள்பட பல்வேறு பகுதிகளை பார்வையிட்ட அவர், அவற்றில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டி உடனடியாக சரி செய்யுமாறு அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து நிருபர்களிடம் கூறியதாவது:
இதயவியல், புற்றுநோயியல் என பல்வேறு துறைகளுக்கான சிறப்பு சிகிச்சைகள் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகின்றன. அதனால்தான் இங்கு மக்கள் அதிகமாக வருகின்றனர். அதை கருத்தில் கொண்டு நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப இதயவியல் மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓமந்தூரார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை முன்பதிவுக்கான காத்திருப்பு காலம் அதிகமாக உள்ளது. அதற்கு காரணம் இங்கு உயர் தரமான மருத்துவப் பரிசோதனைகள் மலிவான கட்டணத்தில் கிடைப்பதுதான். எனவே, இதை பின்பற்றி வேறு இடத்திலும் இத்தகைய கட்டமைப்பை ஏற்படுத்த முடியுமா என்பதை ஆய்வு செய்து வருகிறோம். விதிகளின்படி ஒப்பந்ததாரர்கள் நாள்தோறும் 8 முறை அரசு மருத்துவமனை கழிப்பறைகளை தூய்மைப்படுத்த வேண்டும். அதனை முறையாக மேற்கொள்கின்றனரா என்பது ஆய்வு செய்யப்படுகிறது.
மருத்துவமனைகளில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய அதிகாரிகளுடனும், அமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஒருவேளை மின்சாரம் தடைபட்டாலும் சிகிச்சைகள் பாதிக்காத வகையில் ஜெனரேட்டர் வசதிகள் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. அதிமுக 108 இடங்களில் டெபாசிட் இழந்திருந்தது என நான் பேசியது தவறான தகவல் (input), நான் கூறியது தவறுதான். இவ்வாறு அவர் பேசினார்.
