×

தேர்தல் கமிஷன் கெடுபிடியால் கட்சி பேனர் தயாரிப்பு தொழில் முடக்கம்

தொழிலாளர்கள் பாதிப்பு
மதுரை, மார்ச் 7: தேர்தல் கமிஷன் கெடுபிடியால் கட்சி கொடிகள், பேனர்கள் தயாரிக்கும் தொழில்கள் முடங்கி, அவைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்.6ல் நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பொதுவாக தேர்தல் வந்தால் கிராமங்களில் வீதிதோறும் கட்சி கொடிகள், சுவர் விளம்பரங்கள், கொடி கம்பங்கள் என, தேர்தல் அறிவித்த நாள் முதல் அமர்க்களமாக இருக்கும். ஆனால், கடந்த தேர்தல்களில் தேர்தல் கமிஷன் கெடுபிடியால் விளம்பரங்கள், கட்சி கொடிகள் கட்டுவதற்கு கட்டுபாடு விகித்ததால் அரசியல் கட்சியினர் பிரசாரத்துடன் முடித்து வருகின்றனர். அதேபோல் தற்போது வரும் தேர்தலிலும் கட்டுபாடுகள் இருப்பதால், கட்சி கொடிகள் பேனர்கள் அச்சடிக்கும் தொழில்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன.

இது குறித்து மதுரை கீழமாசி வீதி வியாபாரி முத்துராஜ் கூறும்போது, ‘‘தேர்தல் என்றால் 40 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விற்பனை அமோகமாக இருக்கும். சாப்பிட கூட நேரம் கிடைக்காமல் வேலை பளு இருக்கும். கட்சி கொடிகள் உள்ளிட்டவைகளை, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து கட்சியினருக்கு விற்பனை செய்வது வழக்கம். ஆனால், கடந்த 3 தேர்தல்களில் அரசியல் கட்சியினர் கட்சி கொடிகள், சுவர் விளம்பரங்கள் செய்யக் கூடாது என கட்டுப்பாடு விதித்ததால் கட்சி கொடிகள் விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பேனர்கள் அச்சடிக்கும் பணிகளும் தற்போது இல்லை. ஒட்டு மொத்ததில் தேர்தல் தொழில்கள் முற்றிலும் முடங்கி விட்டன’’ என்றார்.

Tags : Election Commission scandal ,
× RELATED பெரியகருப்பூர் சாமுண்டீஸ்வரி கோயில் காப்பு கட்டு விழா