×

காவல் நிலையத்திற்குள் சென்று பெண் தலைமை காவலரை மிரட்டிய சரித்திர பதிவேடு குற்றவாளிகளான அண்ணன், தம்பி ஆகிய இருவர் கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு காவல் நிலைய தலைமை காவலர் ஜெயா செல்வி. காவல் நிலையத்தில் அவர் மட்டும் பணியில் இருந்த போது அங்கு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள்
அண்ணன் தம்பிகளான சூர்யபிரகாஷ் (எ) சூர்யா (27) , தங்கசாமி என்ற நவீன் இருவரும் நாங்கள் வீட்டில் இல்லாத போது எங்களை வீட்டிற்கு வந்து விசாரித்த போலீஸ் யார் என்று சொல்ல மாட்டியா? என்றும் தகாத வார்த்தைகளால் பெண் காவலரை தீட்டியுள்ளனர். இனியும் எங்களை தேடி வீட்டிற்கு போலீஸ் வந்தால் கொல்லாமல் விடமாட்டோம் என்று மிரட்டியுள்ளனர்.

பெண் காவலர் இருவரையும் காவல் நிலையத்தை விட்டு வெளியே போக சொல்லியும் போகாமல் தகராறு செய்தவர்களை ரோந்து பணிக்கு சென்ற ஆய்வாளர் மற்றும் போலீசாரை வரவழைத்தார். காவல் நிலையம் வந்த ஆய்வாளர், சரித்திர பதிவேடு குற்றவாளிகளான அண்ணன் தம்பிகளை பிடித்து வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இருவர் மீதும் பெண் காவலரை மிரட்டியாக வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்கு சென்று பெண் காவலரை சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Sivaganga District ,Karaikudi South Police Station ,Chief Guard ,Jaya ,Surya Prakash (a) ,Surya ,Tangasami ,
× RELATED சென்னையில் நண்பர்களால் சிறுமி பாலியல் வன்கொடுமை: போலீசார் தீவிர விசாரணை