×

வச்சு இருக்கேன் என்று கூறியதால் செருப்படி நடுரோட்டில் இளம்பெண்ணை அடித்து கொன்ற முதியவர்: சிதம்பரம் அருகே பயங்கரம்

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் மீதிகுடி செங்கமேட்டு தெருவை சேர்ந்தவர் கார்த்திக் – காமாட்சி (28). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வருடமாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காமாட்சி மீதிகுடியில் உள்ள தாய் வீட்டில் வசித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை மீதிகுடி நடுத்தெருவை ேசர்ந்த மகேந்திரன் (65), காமாட்சி வீட்டிற்கு வந்து வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டு இருந்த காமாட்சியை இரும்பு பைப்பால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் நிலைதடுமாறி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காமாட்சியை தாக்குவதை தடுக்க வந்த அவரது தந்தை பாண்டுரங்கனையும் தாக்கியதில், அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து மகேந்திரன் அங்கிருந்து தப்பி சென்றார்.

தகவலறிந்து அண்ணாமலை நகர் போலீசார் சென்று காமாட்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காமாட்சியை அடித்து கொன்ற மகேந்திரனை கைது செய்தனர். அவரிடம் எஸ்பி ஜெயக்குமார் விசாரணை நடத்தினார். சம்பவம் குறித்து எஸ்.பி ஜெயக்குமார் கூறியதாவது: மகேந்திரன், விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். பணம் கொடுக்கல் வாங்கலிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் காமாட்சிக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் பணமும், சில கிராம் தங்க நகைகளும் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், காமாட்சிக்கும், தனக்கும் தொடர்பு உள்ளது என்றும், அதனால் தான் பணம் கொடுத்து உதவுகிறேன் என்றும் ஊரில் தகவலை பரப்பியுள்ளார்.

இதையறிந்த காமாட்சி, கடந்த 3 மாதத்திற்கு முன் மகேந்திரனை காட்டுமன்னார்கோவிலுக்கு வரவழைத்து, அவரது செல்போனை பறித்து, வீடியோ எடுத்துள்ளார். அதில், நீ என்னை வைத்திருக்கிறாயா என்று சொல் என கேட்டு மிரட்டி செருப்பால் அடித்துள்ளார். அப்போது மகேந்திரன் இல்லை, நான் பொய் சொல்லி விட்டேன் என கூறியதாக தெரிகிறது. பின்னர் அந்த செல்போனை மகேந்திரனிடம் தராமல் காமாட்சி அங்கிருந்து சென்றுள்ளார். இதையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன் மகேந்திரன், தனது செல்போனை ஊரில் உள்ள ஆட்களை வைத்து பஞ்சாயத்து பேசி காமாட்சியிடம் இருந்து வாங்கியுள்ளார்.

செருப்பால் அடுத்த வீடியோவை உறவினர்களின் செல்போனுக்கு காமாட்சி அனுப்பி வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன், நேற்று காலை அடித்து கொலை செய்துள்ளார். இவ்வாறு எஸ்.பி தெரிவித்தார்.

Tags : Chidambaram ,Karthik ,Kamatchi ,Chengamettu Street, ,Meethikudi ,Annamalai Nagar ,Chidambaram, Cuddalore district ,Meethikudi… ,
× RELATED விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை