×

அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கட்டமடுவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வழங்கிய காலை உணவில் பல்லி விழுந்த உணவை சாப்பிட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவர்கள் அடுத்தடுத்து மயங்கியதை அடுத்து உணவை பரிசோதித்த போது பல்லி இருந்தது தெரியவந்தது. அதனை அடுத்து உணவை உட்கொண்ட மாணவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அந்த மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

Tags : Tiruvannamalai ,Katamaduvu Panchayat Union Middle School ,Chengam, ,Tiruvannamalai district ,
× RELATED குடிநீர் வழங்காததை கண்டித்து...