சென்னை: அண்ணாமலை இயக்கத்தில் இணைந்தோர் எண்ணிக்கை இன்று காலையில் 15 லட்சத்தை தாண்டியது. பாஜகவினர் பெருமளவில் சேர்ந்து வருகின்றனர். இதனால், தமிழக பாஜக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார். மேலும் அவர் தனது கட்சி அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடும் என அறிவித்துள்ளார். அண்ணாமலை நேற்று முன்தினம் அரசியலை கட்சியை தொடங்கியது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு தனது இயக்கத்தில் சேர்வதற்கான இணையதள முகவரியையும் தெரிவித்தார்.
அதில் உடனடியாக பலரும் சேர தொடங்கினார்கள். இந்த நிலையில், தற்போது வரை ( இன்று காலை 11 மணி) ஆன்லைன் மூலம் அண்ணாமலை இயக்கத்தில் இணைவோர் எண்ணிக்கை 15 லட்சத்தை ( 15,54,066) தாண்டியது. நிமிடத்திற்கு 200, 300 என அடுத்தடுத்து உறுப்பினர்கள் சேர்க்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் பா.ஜ.கட்சியை சேர்ந்தவர்கள். இதனால் தமிழக பாஜக மேலிடம் கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.
