×

பாங்கர் குண்டுவெடிப்பு வழக்கில் திரிணாமுல் முன்னாள் எம்எல்ஏ சவுகத் மொல்லா கைது: என்ஐஏ அதிரடி

புதுடெல்லி: பாங்கர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய சதிகாரரான திரிணாமுல் முன்னாள் எம்எல்ஏ சவுகத் மொல்லாவை என்ஐஏ நேற்று கைது செய்தது. மேற்குவங்கத்தில் கடந்த மார்ச் 19ம் தேதி தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பாங்கர் பகுதியில் உள்ள தக்ஷின் பமுனியா கிராமத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். 3 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ), வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் வஹிதுல் இஸ்லாம் உள்பட பலரை கைது செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சவுகத் மொல்லாவின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை கடந்த 4ம் தேதி சோதனை நடத்தியது. இந்நிலையில் பாங்கர் குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த சவுகத் மொல்லாவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நான்காவது குற்றவாளியான சவுகத் மொல்லா, பிற குற்றவாளிகளுக்கு வெடிகுண்டு தயாரிக்க உதவிய முக்கிய சதிகாரர் என தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

Tags : Trinamool ,MLA ,Chaukat Molla ,Banker ,NIA Action ,New Delhi ,NIA ,Dakshin Bamuniya ,South 24 Parkanas district ,
× RELATED விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை