×

இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்; வைபவ் சூரியவன்ஷிக்கு வாய்ப்பு!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. அயர்லாந்து, இங்கிலாந்து சுற்றுப்பயணங்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய டி20 அணிகளை பிசிசிஐ (BCCI) ஒன்றாக அறிவித்துள்ளது.

இந்த மூன்று அணிகளையும் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் வழிநடத்தவுள்ளார். அதேபோல், இளம் ஆட்டக்காரர் திலக் வர்மா புதிய துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இலங்கை ஏ அணிக்கு எதிரான இரண்டு 4 நாள் போட்டிகளுக்கான (டெஸ்ட்) அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு துருவ் ஜூரல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபகாலமாக மோசமான ஃபார்மில் தவித்து வரும் முன்னாள் டி20 உலகக் கோப்பை வின்னிங் கேப்டன் சூர்யகுமார் யாதவ், சீனியர் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது இந்த அறிவிப்பில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், உலக கிரிக்கெட்டையே வியப்பில் ஆழ்த்திய 15 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி முதன்முறையாக சீனியர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் உற்றுநோக்கச் செய்துள்ளது.

சுற்றுப்பயணங்களுக்கான இந்திய டி20 அணிகளின் விவரம்:

1. இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி:
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சிவம் துபே, திலக் வர்மா (துணைக் கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், வைபவ் சூரியவன்ஷி.

2. அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி:
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, திலக் வர்மா (துணைக் கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், வைபவ் சூரியவன்ஷி.

3. ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணி (Asian Games Squad):
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணைக் கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வைபவ் சூரியவன்ஷி.

Tags : Shreyas Iyer ,Indian T20 ,Vaibhav Suryavanshi ,Mumbai ,Indian cricket ,BCCI ,Indian ,T20 ,Ireland ,England ,Asian Games ,
× RELATED உலகளாவிய நிச்சயமற்ற சூழலுக்கு...