×

நள்ளிரவில் வீடு புகுந்து துணிகரம்; 3 குழந்தைகளின் தாயை கடத்தி கூட்டு பலாத்காரம்: வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்

 

திருமலை: நள்ளிரவில் வீடு புகுந்து 3 குழந்தைகளின் தாயை கடத்தி சகோதரனுடன் கள்ளக்காதலன் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் வீடியோ எடுத்தும் மிரட்டியுள்ளார்.
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர். ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளார். இந்நிலையில் இப்பெண்ணுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (35) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு பெண் தனது மகள்களுடன் வீட்டில் தூங்கினார்.

அப்போது சுதாகர் மதுபோதையில் வீட்டுக்கு வந்து பெண்ணை உல்லாசமாக இருக்க வெளியே வருமாறு அழைத்துள்ளார். அவர் இரவு நேரத்தில் 3 மகள்களை விட்டுவிட்டு வரமுடியாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுதாகர் பெண்ணை வலுக்கட்டாயமாக கிராமத்தின் அருகே மறைவான இடத்திற்கு கடத்திச் சென்றுள்ளார். மறைவான இடத்திற்கு சென்றபோது அங்கு சுதாகரின் சகோதரன் னுவும் இருந்துள்ளார். அவர்கள் இருவரும் பெண்ணை அடித்து உதைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை சகோதரர்கள் இருவரும் மாறிமாறி வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர். அதன்பிறகு இவர்களிடம் இருந்து தப்பிய பெண் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

ஆனால் சிறிது நேரத்தில் சுதாகர், பெண் வீட்டுக்கு சென்று மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த பெண் நகரிக்கல்லு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சுதாகர், தலைமைச் செயலகத்தில் வேலை செய்துள்ளார். அப்போது 3 பெண்களை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஏமாற்றி பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அப்பெண்கள் புகார் கொடுத்துள்ளனர். இதனால் சுதாகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. இதையடுத்து தற்போது கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட சுதாகர் மற்றும் னுவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Tirumala ,Palnadu district ,Andhra Pradesh.… ,
× RELATED உத்திரப்பிரதேச அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து