×

சட்ட துறையின் முதல் பெண் செயலராக சுமதி நியமனம்

சென்னை: சட்ட துறையின் முதல் பெண் செயலாளராக சுமதி நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: சட்ட துறையின் செயலாளராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு பணியிலிருந்து கடந்த 31ம் தேதி ஓய்வு பெற்றார்.

அவரது ஓய்வை தொடர்ந்து, மாநில சட்ட ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் செயலாளராக பணியாற்றி வந்த சுமதி, நேற்று முன்தினம் முதல் சட்ட துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்தின் மூலம் சுமதி சட்டத் துறையின் செயலாளர் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார். இது சட்டத் துறையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Assumi ,Chennai ,Tamil Nadu government ,Sumati ,Government of Tamil Nadu ,George Alexander ,Department ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து