×

சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப.சுமதியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

 

சென்னை: சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப.சுமதியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- சட்டத் துறையின் செயலாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த திரு.சி.ஜார்ஜ் அலெக்சாண்டர் அவர்கள், அரசு பணியிலிருந்து மே 31ம் தேதி அன்று ஓய்வு பெற்றார்.

அவரது ஓய்வைத் தொடர்ந்து, மாநில சட்ட ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் செயலாளராக பணியாற்றி வந்த ப.சுமதி, 02.06.2026 முதல் சட்டத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்தின் மூலம், திருமதி.ப.சுமதி அவர்கள் சட்டத் துறையின் செயலாளர் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார். இது சட்டத் துறையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : P. Tamil Nadu Government ,Chennai ,Department of Law ,Tamil Nadu government ,Sr. ,Department ,of Law ,C. GEORGE ALEXANDER ,MISSION ,
× RELATED அனைத்துத் திட்டப்பணிகளையும் எவ்விதத்...