×

வள்ளுவர் கோட்டத்தில் ‘திருக்குறள் சவால்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது பிரிட்டானியா மில்க் பிகிஸ்

 

சென்னை: பல தலைமுறைகளாக, பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் தமிழ்நாட்டில் குழந்தைகள் வளர்ச்சியில் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக, இந்த பிராண்ட் அதன் பல்வேறு முன்முயற்சிகள் மூலம் மாநிலத்தின் மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தினை கொண்டாடி வருகிறது. இந்த பயணத்தைத் தொடரும் வகையில், பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் திருக்குறள் சேலஞ்சை அறிமுகப்படுத்தியுள்ளது; குழந்தைகள் ஒரு இன்டராக்டிவ் அனுபவத்தின் மூலம் திருக்குறளை காணவும், கற்கவும் உதவும் வகையில் இந்த முன்னெடுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

2,000 ஆண்டுகளுக்கு முன்பு புலவரும், அறிஞருமான திருவள்ளுவர் எழுதிய 1,330 குறள்களின் தொகுப்பான திருக்குறள் – அன்றாட வாழ்க்கை, மனித உறவுகள், கற்றல், தலைமைத்துவம் மற்றும் வாழ்வியல் நன்மதிப்புகள் குறித்த காலத்தால் அழியாத பாடங்களை நமக்கு எடுத்துக் கூறுகிறது. அதன் படிப்பினைகள் யாவும் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து கடத்தப்படுவதால், அதன் ஞானம் இன்றளவும் நமது வாழ்க்கைக்கு பொருத்தமாக உள்ளது. திருவள்ளுவருக்கும், திருக்குறளின் பாரம்பரியத்திற்கும் கௌரவிக்கும் வகையில் சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டது.

இதில் பங்கேற்ற தமிழகத்தின் சிறந்த அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் திருக்குறள் குறித்த அர்த்தமுள்ள கலந்துரையாடலில் ஈடுபட்டனர்; குறிப்பாக, காலம் காலமாக திருக்குறள் எப்படி நமது வாழ்விற்கு ஏற்ற சிந்தனைகளை தொடர்ந்து பொருத்தமாக வழங்கி வருகிறது, மற்றும் இன்று இளைய தலைமுறையினர் எவ்வாறு அதன் கருத்துக்களை எடுத்துக் கொண்டு பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து விவாதித்தனர். மேலும், இளைய தலைமுறையினர் திருக்குறள் கற்றுக்கொள்ளும் முறையை ஏன் புதுமையாகவும் அதிக ஈடுபாடு மிக்க வழியிலும் மாற்ற வேண்டும் என்பது பற்றியும் பேசினர்.

இந்த கலந்துரையாடலில் G.ஞானசம்பந்தன், லிடியன் நாதஸ்வரம், சுகி சிவம் மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். திருக்குறள் தலைமுறை தலைமுறையாக எவ்வாறு பகிரப்படுகிறது, அதன் வழிகாட்டுதல்களை குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதற்கு – கதைசொல்லல், இசை மற்றும் அன்றாட உரையாடல்களின் பங்கு எந்தளவிற்கு உள்ளது; மேலும், இளைய திருக்குறளை தெரிந்துகொள்வதற்கும், கற்றுக்கொள்வதற்கும் தலைமுறையினரை ஊக்குவிப்பதில் புதுமையான இன்டராக்டிவ் அனுபவங்கள் எப்படி உதவுகின்றன என்பது குறித்தும் அவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த முயற்சி குறித்து பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொது மேலாளர் (மார்கெட்டிங்) அர்ச்சனா பலராமன் கூறுகையில், “பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் பல தலைமுறைகளாக தமிழகத்துடன் ஒரு சிறப்பு பிணைப்பைப் பகிர்ந்து வருகிறது; மேலும் மாநிலத்தின் கலாச்சாரத்தைக் கொண்டாடுவது என்பது எப்போதும் மில்க் பிக்கிஸின் பயணத்தின் ஒரு முக்கிய பகுதியாகவும் உள்ளது. நாம் எப்படி பேசுகிறோம், எப்படி கற்பிக்கிறோம், எப்படி வாழ்கிறோம் என்பதை நம்முடன் ஒன்றாகப் பிணைத்த திருக்குறள் என்கிற மேன்மையான நூல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்தமான ஒரு பொதுமறையாகும்.

பிரிட்டானியா மில்க் பிகிக்ஸ் ‘திருக்குறள் சேலஞ்ச்’ முன்னெடுப்பு மூலம், இளைய தலைமுறையினர் ஒரு இன்டராக்டிவான மற்றும் சுவாரஸ்யமான அனுபவத்தின் மூலம் திருக்குறளைத் தெரிந்துகொள்ளவும், கற்றுக்கொள்ளவும் உதவுவதில் நாங்கள் பங்காற்ற விரும்பினோம். இந்த முயற்சி அதிக குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை குறகளுடன் ஒன்றாக ஈடுபட ஊக்குவிக்கும் என்றும், அவர்கள் ஒன்றாக கண்டறிந்து கற்கும் தருணங்களை உருவாக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்று தெரிவித்தார்.

டேலண்டட் நிறுவனத்தின், பிராண்ட் ஸ்ட்ராடஜி அலுவலர், ரியா சர்மா கூறுகையில், “திருக்குறள் என்பது நமது வாழ்க்கைக்கான ஒரு உண்மையான வழிகாட்டியாகும். ஊக்கமளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட அர்த்தமுள்ள ரீல்ஸ் மற்றும் பாட்காஸ்ட்கள் போன்றவை வருவதற்கு முன்பே, பல நூற்றாண்டுகளாக திருக்குறளின் அற்புதமான குறள்கள் மக்கள் சிறப்பான வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதை கற்பித்து வருகிறது. மில்க் பிக்கிஸின் இந்த பிரச்சாரத்தின் மூலம், புதிய தலைமுறைக்கு திருக்குறள் எப்படி பொருத்தமாக உள்ளது என்பதை வெளிப்படுத்த முயற்சிக்கிறோம். 2,000 ஆண்டுகள் பழமையான ஒரு வாழ்க்கை பயிற்சியாளரை இப்போது நாம் சாப்பிடும் பிஸ்கட்டில் கொண்டு வருகிறோம்,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

டேலண்டட் நிறுவனத்தால் கருத்தாக்கம் செய்யப்பட்ட இந்த புதிய முன்முயற்சியில், இப்போது பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் பேக்குகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிஸ்கட்டுகளில் திருக்குறளின் சொற்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அதாவது வெவ்வேறு சொற்கள் பேக்குகளில் உள்ள பிஸ்கட்டில் காணப்படும். மில்க் பிக்கிஸ் பிஸ்கட்களில் உள்ள சொற்களை ஒருங்கிணைத்து வரிசையாக அடுக்கும் போது மூன்று குறள்களை முழுமையாக உருவாக்கலாம்; அவை நட்பு, கற்றல், விடாமுயற்சி போன்ற கருப்பொருள்களை மையமாகக் கொண்டிருக்கும்.

இது வெறும் பிஸ்கட் பேக் மட்டுமல்ல; ஒரு பிரத்யேக மைக்ரோசைட் மூலம் நுகர்வோர் அவர்கள் கண்டுபிடிக்கும் திருக்குறள் சொற்களை சேகரிக்கவும், அதை ஒன்றாக்கி திருக்குறளை நிறைவு செய்யவும், அதன் மூலம் பரிசுகளை வெல்லவும் முடியும். மில்க் பிக்கிஸ் மூலம் கற்றலை மகிழ்ச்சியான ஒரு இன்டராக்டிவ் அனுபவமாகவும் மாற்றுகிறோம். புத்தகங்கள், வகுப்பறைகள் மற்றும் பொது இடங்கள் மூலம் பாரம்பரியமாக கற்கப்படும் திருக்குறளை இப்போது நமக்குப் பரிட்சயமான மில்க் பிக்கிஸ் சாப்பிடும் தருணத்தின் மூலம் எவ்வாறு திருக்குறளை அனுபவிக்க முடியும் என்பதை இந்த விளம்பரப் படம் வெளிக்காட்டுகிறது.

மில்க் பிக்கிஸ் திருக்குறள் சேலஞ்சில் பங்கேற்க:
1. ஒரு ஸ்பெஷல் எடிஷன் மில்க் பிக்கிஸ் திருக்குறள் பேக்கை வாங்கி அதிலுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
2. பிஸ்கட்டில் திருக்குறள் வார்த்தைகளைக் கண்டறியவும்.
3. அவற்றை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.
4. பரிசுகளை வெல்ல வீடியோவைப் பதிவு செய்து அனுப்பவும்.

Tags : Britania Milk Piggies ,Valluwar Castle ,Chennai ,Britania Milk ,Tamil Nadu ,
× RELATED கோவைக்கு மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது அறிவிப்பு