×

தக்கலை பகுதியில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு

தக்கலை, மார்ச் 5 : தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற இடைத்தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக குமரி மாவட்டத்திற்கு மத்திய துணை ராணுவ படையினர் வருகை தந்துள்ளனர். பொது மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், அச்சமின்றி வாக்களிக்கவும் மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது. நேற்று தக்கலை காவல் உட் கோட்டத்தில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அழகியமண்டபம் ஜங்ஷனில் தொடங்கி வட்டம் வரை 3 கி.மீ. நடைபெற்ற அணிவகுப்பில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிமாறன்,  தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன், தக்கலை இன்ஸ்பெக்டர் சுதேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த அணிவகுப்பில் மத்திய துணை ராணுவ படையினர் 60 பேர், தாலுகா காவலர்கள் 39 பேர் மற்றும் ஆயுதப்படை காவலர்கள்  46 பேர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 32 பேர் என  மொத்தம் 184 பேர் கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

Tags : Takala ,
× RELATED தக்கலையில் அதிக பாரம் ஏற்றி வந்த 10 டாரஸ் லாரிகளுக்கு அபராதம்