தமிழ் வழியில் படித்த உறுதி சான்று வழங்க பணம் சிஇஓவிடம் புகார்

தேனி, மார்ச் 5: தேனியை சேர்ந்தவர் ராமர். மருத்துவ பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார். இவர் நேற்று தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் மனு அளித்தார். பின்னர் ராமர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது மகள் கதிஜா ஆண்டிபட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வழியில் பிளஸ் 2 வரை படித்தார். தற்போது அரசு பணிக்கு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதால், எனது மகள் கதீஜாவிற்கு தமிழ் வழியில் படித்ததற்கான உறுதிச்சான்று பெறுவதற்காக பள்ளிக்கு சென்றேன். பள்ளியில் உறுதிச்சான்று தர வேண்டுமானால் ரூ.3 ஆயிரம் வேண்டும் என்றனர். பின்னர் ரூ.1000 கொடுத்த பிறகு தமிழ் வழியில் படித்ததற்கான சான்று வழங்கினர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories:

>