×

உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட சுப்பிரமணி மோகனாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை: உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த வெங்கிட சுப்பிரமணி மோகனாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக முதல்வர் விஜய் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வெங்கிட சுப்பிரமணி மோகனா நியமனம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

உச்ச நீதிமன்ற வரலாற்றில், மூத்த வழக்கறிஞராக பணியாற்றி நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் 2வது பெண் என்ற பெருமையையும், தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். வெங்கிட சுப்பிரமணி மோகனாவின் நியமனம் பெண் கல்வி முன்னேற்றத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உந்து சக்தியாக திகழும். உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கவிருக்கும் அவருக்கு என் சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,Vijay ,Subramani Mohana ,Supreme Court ,Chennai ,Venkita Subramani Mohana ,Tamil Nadu ,Coimbatore district ,Tamil Nadu… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து