×

கூடைப்பந்து சங்க தலைவர் பதவியில் ஆதவ் அர்ஜுனா நீடிப்பதா? விதிகளை சுட்டிகாட்டி அதிமுக எம்பி இன்பதுரை கேள்வி

 

சென்னை: அதிமுக மாநிலங்களவை எம்பி இன்பதுரை இன்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: விளையாட்டுத் துறை அமைச்சர், கூடைப்பந்து சங்கத்தின் தலைவராக நீடிப்பது ‘நலன் முரண்பாடு’குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. 2015-ல் ‘பிசிசிஐ என்ற வழக்கில், உச்ச நீதிமன்றம் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் 3 ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்தது.

‘நலன் முரண்பாடு’ என்ற தலைப்பில் அந்தக் குழு அளித்த அறிக்கையின் முதல் பரிந்துரைகளில் ஒன்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் விளையாட்டுச் சங்கங்களில் பதவி வகிக்கக் கூடாது என்பது தான். இந்தப் பரிந்துரைகளில் பலவற்றை உச்ச நீதிமன்றமும் ஏற்றுத் தீர்ப்பளித்துள்ளது. “விதிகள் ஏதும் இல்லை” என்று கூறும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு இதனை தமிழக அரசு அதிகாரிகள் எடுத்துச் சொல்ல வேண்டும். “விளையாட்டு அரசியல்” செய்யும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags : Adav Arjuna ,Basketball Association ,Adimuga ,Inpadurai ,Chennai ,Invadurai ,Twitter ,BCCI ,Supreme Court ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து