- திருக்கோவிலூர்
- சூர்யகுமார்
- சதீஷ்
- மனம்புண்டி கிராமம்
- கல்லக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர்
- லட்சுமி
- சதேஷுகு சங்கர்
- சம்பத்
திருக்கோவிலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யகுமார் மகன் சதீஷ் (29). திருமணம் ஆகாதவர். தனது தாயார் லட்சுமியுடன்(80) வசித்து வரும் சதீஷ், அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். சதீஷூக்கு சங்கர், சம்பத் என இரண்டு அண்ணன்கள் உள்ளனர். இவர்களுக்கும் திருமணம் ஆகவில்லை.
இவர் வழக்கம்போல் நேற்று இரவு வீட்டிற்கு வந்து தனது தாயிடம் நான் சாப்பிட்டு விட்டேன், நீ சாப்பிட்டு விட்டு தூங்கு எனக்கூறி படுக்கை அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டு தூங்க சென்றுவிட்டார். பின்னர் இன்றுகாலை 6 மணி அளவில் லட்சுமி, சதீஷ் இருந்த அறையின் கதவை தட்டி உள்ளார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லட்சுமி பின்பக்க வழியாக சென்று அங்கிருந்த ஜன்னலை திறந்து பார்த்தபோது, சதீஷின் இரண்டு கைகளும் மின்சார ஒயரால் கட்டப்பட்டு இருந்தன.
மின்ஒயரின் ஒரு பகுதி சுவிட்ச் போர்டு பிளக்கில் சொருகப்பட்டிருந்தது. சதீஷ் இறந்த நிலையில் கிடந்தார்.இதுகுறித்த போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சதீஷ் மற்றும் அவரது சகோதரர்கள் இருவருக்கும் திருமணம் ஆகாததால் மனமுடைந்த சதீஷ் தனது கைகளை மின்ஒயரால் கட்டி மின்சாரத்தை உடலில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
