×

கேரள தலைமை தேர்தல் அதிகாரியாக டாக்டர் கவுசிகன் நியமனம்

திருவனந்தபுரம்: கேரள தலைமை தேர்தல் அதிகாரியாக ஓசூரை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான டாக்டர் கவுசிகன் நியமிக்கப்பட்டுள்ளார். கேரள தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ரத்தன் யு. கேல்கர் சமீபத்தில் கேரள முதல்வர் வி.டி.சதீசனின் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக கேரள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் துறைமுக செயலாளரான டாக்டர் கவுசிகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

2009ம் ஆண்டு கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரியான இவரது சொந்த ஊர் ஓசூர் ஆகும். ஒற்றப்பாலம் சப் கலெக்டர், திருச்சூர், இடுக்கி மற்றும் திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர், பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குனர் உள்பட பல்வேறு பொறுப்புகளை இவர் வகித்துள்ளார். டாக்டர் கவுசிகனின் மனைவி கிருத்திகா வயநாடு மாவட்டம் பூக்கோட்டில் உள்ள கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

Tags : Dr. ,Kaushikan ,Kerala ,Chief Electoral Officer ,Thiruvananthapuram ,IAS ,Hosur ,Chief Electoral Officer of ,Ratan U. Kelkar ,Chief Minister ,V.D. Satheesan ,Chief Electoral Officer… ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...