×

30 நாட்களுக்கு எல்பிஜி கையிருப்பு: ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: மேற்கு ஆசிய மோதல் காரணமாக எல்பிஜி காஸ் விநியோகத்தில் சில தடைகள் ஏற்பட்டு வருவதாக பரவலாக தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில் குறைந்த பட்சம் 30 நாட்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் எல்பிஜி சிலிண்டர்கள் சேமிப்புத் திறனை அதிகரிக்க வேண்டும் என அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களை ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா கூறுகையில்,மேற்கு ஆசியா போரினால் இந்தியா உட்பட உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதித்தது. எனவே குறைந்தபட்சம் 30 நாட்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எல்பிஜி காஸ் சேமிப்பு திறனை அதிகரிப்பதற்கான திட்டங்களை தயாரிக்கும் படி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனங்களை அரசு கேட்டு கொண்டுள்ளது என்றார்.

Tags : Union ,New Delhi ,Asian conflict ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...