×

அன்புமணி டிவிட்: நீட்டுக்கு வலுக்கும் எதிர்ப்பை ஒன்றிய அரசு உணர வேண்டும்

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நீட் தேர்விலிருந்து மராட்டியத்திற்கு விலக்கு பெற வேண்டும் என்று அம்மாநில முதல்வருக்கு ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாநில தலைவர் கடிதம் எழுதியுள்ளார். நீட் ஒரு சமூக அநீதி என்பதற்கு இது சாட்சி. இந்தியாவில் நீட் தேர்வின் தீமைகளை காங்கிரஸ் உணர தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்க நல்ல திருப்பம். நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான அலை வீசத் தொடங்கப் போகிறது என்பதையே மராட்டியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காட்டுகிறது. நீட் மிகப்பெரிய சமூக அநீதி. அது ஒரு மாணவர் கொல்லி என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த உண்மையை ஒன்றிய அரசு உணர வேண்டும்.  தமிழ்நாடு உள்ளிட்ட எந்தெந்த மாநிலங்கள் நீட் விலக்கு கோருகின்றனவோ, அந்த மாநிலங்களுக்கு அதற்கான ஒப்புதல் வழங்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post அன்புமணி டிவிட்: நீட்டுக்கு வலுக்கும் எதிர்ப்பை ஒன்றிய அரசு உணர வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Anbumani Dewitt ,Union Government ,CHENNAI ,Anbumani ,Twitter ,Maharashtra ,NEET ,
× RELATED பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில்...