- சச்சின் சரத்சந்திர குர்வி
- சென்னை துறைமுக கழகம்
- சென்னை
- ஐஏஎஸ்
- சுனில் பாலிவால்
- இந்திய அரசு
- நீர்வழிகள் கழகம்…
சென்னை: சென்னை துறைமுக கழகத்தின் புதிய தலைவராக சச்சின் சரத்சந்திரா குர்வி என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பொறுப்பேற்று கொண்டார். ஏற்கெனவே சென்னை துறைமுக கழகத்தின் தலைவர் பொறுப்பில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி சுனில்பாலிவால், தற்போது இந்திய அரசின் நீர்வழி கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார். தற்போது சென்னை துறைமுகத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள சச்சின் சரத்சந்திரா குர்வி, கடந்த 2003ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநில ஐஏஎஸ் பேட்ச் பிரிவை சேர்ந்தவர். இவர், கடந்த 20 ஆண்டுகளாக உத்தரகாண்ட் மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுகளில் பல்வேறு நிர்வாக பிரிவுகளில் பொறுப்பேற்று திறம்பட பணியாற்றியவர்.
இவர் சென்னை துறைமுக தலைவராக பொறுப்பு ஏற்பதற்கு முன்பு, சிவில் ஏவியேஷன் துறையில் உடல்நலம், மருத்துவ கல்வி பிரிவின் செயலாளராக திறம்பட பணியாற்றியுள்ளார். அதேபோல் உத்தரகாண்ட் மாநில சுற்றுலா, வருவாய் மற்றும் வணிகவரி பிரிவுகளின் செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார். பின்னர் மாற்று பணி காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு மாவட்ட கலெக்டராகவும், அம்மாநில முதல்வரின் முதன்மை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது பணிக்காலத்தின்போது மகாராஷ்டிரா மற்றும் உத்தரகாண்ட மாநில ஆளுநர்களின் விருது மற்றும் குடியரசு தலைவரின் விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது தலைமையின்கீழ் சென்னை துறைமுகத்தில் இயக்குதல் உள்பட பல்வேறு செயல்பாடுகளில் நவீனமயம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பல்வேறு தொழில்நுட்பங்கள் செயல்பாடு, இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுடன் கடல்வழி வர்த்தகங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
