வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த மடிக்கணினிகள் திருடப்பட்டது. பள்ளியின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மடிக்கணினிகளை திருடிச் சென்றுள்ளனர். ஆதாரங்களை அழிக்க சிசிடிவி கேமராக்களை உடைத்து, ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
