திருநெல்வேலி: நெல்லையில் காதல் விவகாரத்தில் பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் காதலியின் தாயார் எஸ்ஐ கிருஷ்ணகுமாரி தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கொலையாளி சுர்ஜித், அவரது தந்தை சரவணன், உறவினர் ஜெயபால் ஆகிய மூவரும் ஏற்கெனவே கைதாகி நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
