×

சரக்கு போட்டு உதவி ஆய்வாளர் வாகன தணிக்கை

கலசபாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் அருகே ஜமுனாமரத்தூர் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், கடலாடி சிறப்பு எஸ்ஐ காமராஜ், முதல் நிலை போலீஸ் குமார் ஆகியோர் வாகன தணிகையில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து பைக் திருட்டு புகார் தொடர்பாக நீதிபதி வழங்கிய உத்தரவை சிறப்பு எஸ்ஐ காமராஜிடம் பாதிக்கப்பட்ட ஏழுமலை என்பவர் வழங்கினார். அப்போது காமராஜ், இங்கு எதுவும் செய்ய முடியாது, எதுவாக இருந்தாலும் நீங்கள் காவல் நிலையத்திற்கு வாருங்கள் என்று கூறினாராம்.

அப்போது கடலாடி சிறப்பு எஸ்ஐ காமராஜ், மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஏழுமலையுடன் சென்ற வழக்கறிஞர், காமராஜ் மது போதையில் மேலும் வாகன தணிக்கையில் ஈடுபடுவது குறித்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் பணியில் இருக்கும்போது எப்படி மது அருந்தலாம் என கேட்கும்போது, சிறப்பு எஸ்ஐ பதில் ஏதும் அளிக்காமல் மவுனமாக அங்கிருந்து செல்கின்றனர்.

Tags : Cargo ,Kalasapakkam ,Thenmahadevamangalam ,Tiruvannamalai district ,Jamunamarathur ,Inspector ,Ravindran ,Kadaladi ,SI Kamaraj ,Kumar ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து