×

விருதுநகர் சிறையில் திறப்பு சந்திப்பு சட்ட உதவி மையம்

விருதுநகர், மே 28: விருதுநகர் சிறையில் சந்திப்பு சட்ட உதவி மையம் திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவுப்படி, விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், விருதுநகர் மாவட்ட சிறையில் முதன்முறையாக கைதிகளை சந்திக்க வரும் பார்வையாளர்களுக்கான சந்திப்பு சட்ட உதவி மையத்தை முதன்மை மாவட்ட நீதிபதி கந்தகுமார் திறந்து வைத்தார்.

அப்போது முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜகுமார், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் பிச்சைராஜன் மற்றும் விருதுநகர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் பாலமுருகன், மாவட்ட சிறை கண்காணிப்பாளர் (பொ) பாண்டி வழக்கறிஞர் அரவிந்த், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஊழியர்கள், சிறை ஊழியர்கள், கைதிகள், கைதிகளை சந்திக்க வந்திருந்த உறவினர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Virudhunagar ,Virudhunagar Prison Visit Legal ,Aid Centre ,Tamil Nadu Legal Services Commission ,Virudhunagar District Legal Services Commission ,Virudhunagar District Prison ,
× RELATED சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது