×

என் இனிய பொன் நிலாவே பாடல் பதிப்புரிமையை விவகாரம்: இளையராஜா மறுஆய்வு மனு தள்ளுபடி: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

 

புதுடெல்லி: மூடு பனி என்ற திரைப்படம் பாலுமகேந்திரா இயக்கத்தில் 1980ம் ஆண்டு வெளிவந்ததாகும். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்களுள் ஒன்றான என் இனிய பொன்நிலாவே. என்பது மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். இந்த பாடலுக்கான பதிப்புரிமையை வைத்திருக்கும் சரிகம இந்தியா லிமிடெட் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடர்ந்திருந்தது. அதில், ஒரு தமிழ் திரைப்படத்தில் எங்களிடம் அனுமதி பெறாமல் இளையராஜாவிடம் அனுமதி பெற்று என் இனிய பொன் நிலாவே பாடல் லை மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தது.

இதையடுத்து வழக்கை பரிசீலனை செய்திருந்த நீதிமன்றம் இளையராஜாவுக்கு எதிரான உத்தரவை பிறப்பித்திருந்தது. இதையடுத்து இதே வழக்கின் மேல்முறையீட்டு மனுவை மீண்டும் விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் அமர்வு,‘‘என் இனிய பொன் நிலாவே பாடல் பதிப்புரிமையை இளையராஜா கேட்க முடியாது என்று கடந்த 21ம் தேதி தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட தீர்ப்புக்கு எதிராக இளையராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஹரி சங்கர் மற்றும் ஓம் பிரகாஷ் ஆகியோர் மனுவை நேற்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

Tags : Ilayaraja ,Delhi High Court ,New Delhi ,Balu Mahendra ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...