×

பொன்பரப்பி மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

 

ஜெயங்கொண்டம், மே 26: பொன்பரப்பி மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் நூற்றாண்டு பழமையான பிரசித்தி பெற்ற அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, பக்தர்கள் மரிக்கொழுந்து, வில்வம், மருவு, தாழம்பூ, பிச்சிப்பூ, மல்லி, முல்லை உள்ளிட்ட பல்வேறு மலர்களை கூடைகளில் ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர்.

Tags : Ponparappi Maha Mariamman Temple Flower-pouring ,Jayankondam ,Arulmigu Maha Mariamman Temple ,Ponparappi ,Senthurai ,Ariyalur ,
× RELATED வெள்ளாற்றில் சேமிப்பில் உள்ள மணலை...