×

மின்னணு வாக்குப்பதிவு விழிப்புணர்வு முகாம் கலெக்டர் ஆய்வு

தேனி, மார்ச் 4: தேனி புதிய பஸ்நிலையத்தில் மின்னணு வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு முகாமை கலெக்டர் கிருஷ்ணணுண்ணி ஆய்வு செய்தார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.6ம் தேதி நடக்க உள்ளது.  இத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேனி புதியபஸ் நிலைய வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இம்முகாமில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்குப்பதிவு கட்டுப்பாட்டுக் கருவி, வாக்களித்ததை உறுதி செய்யும் கருவி ஆகியவற்றின் மூலம் வாக்காளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இம்முகாமை தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரியகுளம் சப்-கலெக்டர் சிநேகா, தேனி தாசில்தார் தேவதாஸ், தேனி நகராட்சி ஆணையர் நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். உத்தமபாளையம்: உத்தமபாளையம் பேரூராட்சியில் வாரச்சந்தை நடக்கும் பைபாஸ், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் குழுவினர்  பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினர். அப்போது பொதுமக்களும் வாக்களிக்கும் முறை குறித்து ஆர்வத்துடன் கேட்டு சென்றனர். இதில் வட்டாட்சியர் உதயராணி, துணை வட்டாட்சியர் கண்ணன், தேர்தல் துணை வட்டாட்சியர் சுருளி மற்றும் வருவாய்த்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Voting Awareness Camp ,
× RELATED சந்தவேலூர் ஊராட்சியில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு முகாம்