×

ரோப் அறுந்து ஜேசிபியுடன் கிணற்றில் விழுந்து டிரைவர் பலி

 

தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கீரனூரை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சில நாட்களாக புதிதாக கிணறு தோண்டும் பணிகள் நடந்து வருகிறது. நேற்று கிணற்றிலிருந்து மண் அள்ளும் பணி நடந்தது. இதற்காக சிறிய ஜேசிபியை ஹிட்டாச்சி மூலம் கிணற்றுக்குள் இறக்கப்பட்டது.அப்போது ரோப் அறுந்து ஜேசிபி கிணற்றுக்குள் விழுந்தது. இதில் ஜேசிபி டிரைவர் அஜித்குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனிருந்த பரமசிவம் படுகாயம் அடைந்தார்.

Tags : JCB ,Thandarampattu ,Venkatachalam ,Keeranur ,Tiruvannamalai district ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து