×

தலைமைச்செயலகமா..! தவெக கட்சி அலுவலகமா.?? ராஜினாமா செய்தபின் ஒரே ஜம்ப்பில் கட்சி தாவிய மூவருக்கு TVK உறுப்பினர் அட்டை.. மரபை மீறும் தவெக

சென்னை: எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி என அதிமுக இரண்டாக பிளவுபட்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாராவிதமாக மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

ராஜினாமா செய்த கையோடு தலைமை செயலகத்திலேயே அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து தங்களை தவெக-வில் இணைத்து கொண்டுள்ளனர். மூவருக்குமே அந்ததந்த தொகுதியில் இடைத்தேர்தலில் தவெக சார்பாகவே போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று விஜய் தரப்பு வாக்குறுதி அளித்துள்ளதாகவும், இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்த கையோடு, தலைமைசெயலகத்திலேயே அதிமுக-வை விட்டு விலகி , தங்களை தவெக-வில் இணைத்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது அறைக்கு வருகைக்கு தந்த மூவரையும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சால்வை போட்டு வரவேற்று தவெக-வில் சேர்த்து கொண்டுள்ளார். அவர்களுக்கு தலைமைச்செயலகத்தில் வைத்தே தவெக உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம் என்பது அரசு நிர்வாகத்திற்கான இடமாகும், இங்கு அரசியல் கட்சிகளின் உறுப்பினர் சேர்க்கை அல்லது அரசியல் இணைப்பு விழாக்கள் நடத்துவது மரபுகளுக்கு எதிரானது என்று பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். இது போன்ற நிகழ்வுகளை கட்சி அலுவலகங்களிலோ அல்லது பொது இடங்களிலோ மட்டுமே நடத்த வேண்டும் என்றும் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.

Tags : Secretary General ,TVK ,Chennai ,Edappadi Palanisami ,C. V. Sanmugham ,S. B. ,Aimuga ,Velumani ,Maduranthagam ,MLA ,Maragadam Kumaravel ,Perudura ,MLA Jayakumar ,Tharapuram ,Sathyabama ,
× RELATED விஜய் தரப்பு அளித்த “வாக்குறுதி”.! 3...