×

தமிழ்நாட்டையே உலுக்கிய விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரன் குற்றவாளி: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 12-ம் வகுப்பு மாணவி கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சுமார் 1000-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து இந்த வழக்கில் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞர் தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டார். தர்ம முனீஸ்வரன் உடலில் நகக்கீறல்கள் இருந்த நிலையில் மாணவியின் நகங்களில் சதைத்துணுக்குகள் இருந்தன. அந்த சதைத்துணுக்குகளின் டி.என்.ஏ.வை சோதனை செய்து தர்ம முனீஸ்வரனை போலீசார் கைது செய்து போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனை குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

Tags : Dharma Muniswaran ,Vratathikulam ,Tamil Nadu ,Tuthukudi district Vlathikulam ,Vednatam ,
× RELATED மே 29 வரை நாடு முழுவதும் வெப்ப அலை நீடிக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்