திருமங்கலத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனை

திருமங்கலம், மார்ச் 4: திருமங்கலம் தொகுதியில் நேற்று முதல் தீவிர வாகன சோதனையில் பறக்கும்படையினர் ஈடுபட்டுள்ளனர்.சட்டசபை தேர்தலையொட்டி திருமங்கலம் தொகுதியில் மூன்று பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று முதல் இவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கப்பலூர் டோல்கேட், திருமங்கலம் - மதுரை விமானநிலையம் ரோடு, ராஜபாளையம் ரோடு, மேலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாகனசோதனையில் ஈடுபட்டனர். கார்கள், பஸ்கள், டூவீலர்கள் முதலியவற்றை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். கட்சி கொடிகளை கட்டி வந்த கார்களிலிருந்த கொடிகளையும் அகற்றினர்.

Related Stories:

>