×

கொட்டாம்பட்டி அருகே மஞ்சுவிரட்டில் காளை முட்டி வாலிபர் பலி

மேலூர், மார்ச் 4: மதுரை மாவட்டம், மேலூர் அருகே கொட்டாம்பட்டி வெள்ளினிப்பட்டியில் நேற்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த காளைகள் பங்கேற்றன. வீரர்களும் கலந்து கொண்டனர். காளைகள் கட்டுமாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. இதில் மாடு முட்டியதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். படுகாயமடைந்த திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சேர்வீட்டை சேர்ந்த ராசு மகன் ரகுமான்(28) மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்து போனார்.

இறந்த ரகுமான் வெளிநாட்டில் இருந்து 3 மாதங்களுக்கு முன்புதான் ஊர் திரும்பினார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. மஞ்சுவிரட்டு நடந்தது மதுரை மாவட்டம் என்றாலும், மாடு குத்திய இடம் திண்டுக்கல் மாவட்டம் பூதகுடியாகும். இதனால் இவ்வழக்கை பதிவதில் இரு மாவட்ட போலீசாருக்குள் பிரச்னை ஏற்பட்டது. முடிவில் மஞ்சுவிரட்டு நடந்த இடம் கொட்டாம்பட்டி என்பதால் இவ்வழக்கு கொட்டாம்பட்டி ஸ்டேஷனில் நேற்றிரவு பதிவானது.

Tags : Manjuvirat ,Kottampatti ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை