×

இங்க சாலை வர்றது எங்களுக்கே தெரியாதுங்க ஒரு ஆண்டுக்கும் மேலாக துவங்காத பணிக்கு ‘உடனடி பிளக்ஸ் போர்டு’ தேர்தல் அவசரமே காரணம் என பாளையம் பகுதி மக்கள் புகார்

குஜிலியம்பாறை, மார்ச் 4: பாளையம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் 4வது வார்டில் 2019- 2020ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் கூட்டக்காரன்பட்டி- சித்தலப்பள்ளி வரை புதிய தார்சாலை அமைக்க ரூ.63 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த வேலைக்கான உத்தரவு நாள் 31.12.2019 என்றும், வேலை முடிவடையும் நாள் 6 மாதங்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டது. கடந்த 14 மாதங்கள் ஆகியும், இன்னும் இப்பணி துவங்கப்படவில்லை. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு திடீரென ரூ.63 லட்சம் மதிப்பீட்டில் சாலை என திட்டம் குறித்து ப்ளக்ஸ் போர்டு ஒன்று வைத்து சென்றனர். இதனை கண்ட கிராமமக்கள் அதிர்ச்சியடைந்து,. 6 மாதங்களில் முடிய வேண்டிய வேலை 14 மாதங்கள் ஆகியும் இன்னும் துவங்கப்படாமல் உள்ளதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இந்த வழித்தடத்தில் புதிய தார்சாலை அமைக்கப்பட உள்ளது என எங்களுக்கே இதுவரை தெரியாது. தேர்தல் அவசரம் காரணமாக போர்டை வைத்து சென்றுள்ளனர்’ என்றனர். பாளையம் பேரூராட்சி அலுவலக தரப்பில் கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் பாளையம் பேரூராட்சியில் ஏற்கனவே செய்து முடித்த பிற பணிகளுக்கு இன்னும் பில்தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அதனால் இந்த பணி ஆரம்பிக்கப்படாமல் உள்ளது. தேர்தல் தேதி அறிவித்த பிறகு இப்பணியை ஆரம்பித்தால், எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கருதி, இத்திட்டம் துவங்கப்பட்ட தேதி, முடிவடையும் தேதி, திட்ட மதிப்பீடு குறித்து ப்ளக்ஸ் போர்ட் வைக்கப்பட்டது’ என்றனர்.

Tags : Palayam ,plaque board ,
× RELATED பாளையம் புனித யோசேப்பு ஆலய