சேலம், மே 25: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நீடிக்கும். இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும். இந்தாண்டு அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதலே கோடை மழை பெய்து வருகிறது.
இதனால், அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்து வெயிலின் தாக்கம் இருந்தது. 98.8 டிகிரி வெயில் பதிவானது. மாலை 5 மணியளவில் மாநகரில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. மழையால் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு, குளிர்காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
