×

ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

 

மதுக்கரை, மே 25: கோவை மாவட்டம், எட்டிமடை பேரூராட்சிக்கு உட்பட்ட க.க.சாவடி பகுதியில், நவக்கரை ரேக்ளா குழுவின் சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. க.க.சாவடியில் உள்ள பாலக்காடு ரோட்டில், 200 மற்றும் 300 மீட்டர் என இரு பிரிவுகளில் நடைபெற்ற இந்த ரேக்ளா பந்தயத்தில், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300 மேற்பட்ட காளைகளுடன் வீரர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் வெற்றிபெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு, ரொக்கப்பணம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது. இந்த ரேக்ளா போட்டியை கான சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ஆர்வமுடன் வந்து ரேக்ளா பந்தயத்தை கண்டு ரசித்தனர். பாலக்காடு ரோட்டில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றதால், வாகனங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டது.

Tags : Recla ,Madukkarai ,Navakkarai Recla ,K.K. Savadi ,Ettimadai Panchayat ,Coimbatore district ,Palakkad Road ,
× RELATED கஞ்சா வைத்திருந்த வடமாநில ஆசாமி கைது