×

கோவை மாவட்ட போலீசில் மாஸ்டர் கமாண்ட் கன்ட்ரோல் சென்டர்

 

கோவை, மே 22: கோவை மாவட்ட போலீஸ் சார்பில், பொதுமக்களின் பாதுகாப்பு, அவசரகால பதில் நடவடிக்கைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு, சைபர் குற்ற கண்காணிப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான காவல் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மாவட்ட காவல் அலுவலகத்தில் மாஸ்டர் கமாண்ட் மற்றும் கன்ட்ரோல் சென்டர் (MCCC) நிறுவப்பட்டுள்ளது. இதற்காக நவீன கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், மாநில மற்றும் மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள வாகன பதிவு எண் அறியும் கேமராக்கள் (ANPR), Dial-100 அவசர உதவி சேவை, சமூக வலைதள கண்காணிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள், சைபர் குற்ற கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு காவல் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படவுள்ளது

Tags : Master Command Control Center ,Coimbatore District Police ,Coimbatore ,
× RELATED ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்