கரூர் மாவட்டம் கடவூர் அருகே விவசாயி ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது மர்ம நபர்கள் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி படுகாயமடைந்தார். 10 குண்டுகள் முதுகில் பாய்ந்த நிலையில் படுகாயத்துடன் விவசாயி மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார். நாட்டுத்துப்பாக்கியால் சுட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
