×

திருப்பூரில் முறைகேடாக தங்கியிருந்த வங்கதேச வாலிபர்கள்: 25 பேருக்கு 2 ஆண்டு சிறை

 

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் கரைப்புதூர் பகுதியில் தனியார் பனியன் நிறுவனத்தில் சட்டவிரோதமாக தங்கி வேலைசெய்த வங்க தேசத்தினர் 25 பேரை பல்லடம் போலீசார் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர் இந்த வழக்கு விசாரணை திருப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி சுரேஷ், வங்க தேசத்தினர் 25 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார்.

Tags : Tirupur ,Palladam police ,Karaippudur ,Palladam, Tirupur district ,Chennai Puzhal ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து