×

சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்காலிகமாக ஆஜராக 5 குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம்: தமிழக அரசு ஆணை

 

சென்னை: தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஆட்சியில் அரசு வழக்கறிஞர்களாக பணியாற்றி வந்த அனைத்து வழக்கறிஞர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, தவெக வழக்கறிஞர்கள் அணியிலிருந்து புதிய அரசு வழக்கறிஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், புதிய வழக்கறிஞர்களை நியமிக்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்தார்.

அதன் அடிப்படையில் தற்காலிகமாக நீதிமன்றத்தில் ஆஜராக 5 குற்றவியல் வழக்கறிஞர்களை நியமனம் செய்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் கே.மணிவண்ணன் ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி ஆர்.கணேஷ்குமார், ஏ.அமர்நாத், எஸ்.யோகராஜா சேகர், சி.ஆர்.மலர்வண்ணன், ஆர்.ராஜசேகர் ஆகியோர் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : Chennai High Court ,Nadu ,Chennai ,Tamil Nadu ,
× RELATED ஜோதிடரை தொடர்ந்து ஆலோசகர்களாக...