×

இன்று புதிதாக பதவியேற்று கொண்ட 2 அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு…

சென்னை: தவெக தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று இரண்டாவது முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. சென்னை ஆளுநர் மாளிகையில்நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்க நிகழ்வில் விசிக துணைப்பொதுச்செயலாளரும், திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினருமான வன்னியரசு தமிழக அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.

அதே போல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காட்சியை சேர்ந்த பாபநாசம் எம்எல்ஏ ஷாஜகானும் அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். இந்த நிலையில் அமைச்சராக பொறுப்பேற்று கொண்டுள்ள பாபநாசம் எம்எல்ஏ ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல புதிய அமைச்சராக பொறுப்பேற்று கொண்டுள்ள திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினருமான வன்னியரசுவிற்கு ஆதி திராவிடர், பழங்குடியினர் நலனை உள்ளடக்கிய சமூகநீதித் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu ,Daweka ,Deputy Assistant Secretary ,Dindivanam Assembly ,Vaniyarasu ,Cabinet Expansion ,Chennai Governor's House ,Minister ,Indian Union ,
× RELATED தவெக அமைச்சரவையில் பங்கேற்கும் விசிக...