×

ராமேஸ்வரம் கடல் உள்வாங்கியது

 

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்தக் கடல் நேற்று வழக்கத்துக்கு மாறாக வடக்கு பகுதியில் சுமார் 30 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பாறைகள், கடல் சிற்பிகள், கிளிஞ்சல்கள் வெளியே தெரிந்தன. கடலின் ஆழம் குறைந்து காணப்பட்டதால் பக்தர்கள் அதிக தூரம் சென்று நீராடினர். சங்குமால் கடற்கரை வரை கரையோரப்பகுதி உள்வாங்கியது. இதன் காரணமாக அக்னி தீர்த்த கடற்கரை அருகில் இயக்கப்படும் படகு சவாரி மதியம் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Tags : Rameswaram ,Ramanathaswamy Temple Agni Theertha ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து