×

மாஜி எம்எல்ஏ திமுகவில் இருந்து திடீர் விலகல்

 

திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும், மத்திய மாவட்ட திமுக செயலாளராகவும் பணியாற்றி வந்த செல்வராஜ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 1976 முதல் 50 வருடங்களாக கழகத்திற்கு விசுவாசமாக உழைத்தேன். கடந்த சட்டமன்ற தேர்தலில் வெளிநபர் ஒருவரின் வற்புறுத்தலால் திருப்பூர் தெற்கு தொகுதி எனக்கு வழங்கப்படவில்லை.

மேலும், எனக்கு விருப்பமில்லாத பல்லடம் தொகுதி முன்னறிவிப்பின்றி ஒதுக்கப்பட்டது. இதனால், அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் விலகுகிறேன். வேறு எந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை. இறுதி மூச்சு வரை கலைஞர் உணர்வோடு மக்கள் பணியாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : MLA ,DMK ,Tiruppur ,Selvaraj ,Tiruppur South ,DMK Central District ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து