×

அம்மா உணவகத்தில் தவெக மாவட்ட செயலாளர்கள் ஆய்வு

 

விழுப்புரம் தவெக மாவட்ட செயலாளர் குஷிமோகன் நேற்று தனது நிர்வாகிகளுடன் சென்று விழுப்புரம் பூங்கா தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அம்மா உணவகத்தில் கழிப்பறை சுத்தமாக வைத்திருக்கவில்லை. மின்விசிறி ஓடவில்லை. சில குறைகளை சுட்டிகாட்டி அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென்று நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டிருக்கிறாராம். எந்தவொரு அரசு, மக்கள்பிரதிநிதி பதவியிலும் இல்லாத தவெக மாவட்ட செயலாளர் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதேபோல், மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் நகராட்சி அருகே அம்மா உணவத்திற்கு நேற்று திருமங்கலம் பகுதியை சேர்ந்த தவெக மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக்பாண்டி தலைமையில் ஏராளமான கட்சியினர் வந்து திடீரென ஆய்வு நடத்தினர். அம்மா உணவகத்தில் ஆய்வை முடித்துக் கொண்ட தவெகவினர், அருகேயுள்ள அரசு மருத்துவமனைக்கும் சென்று ஆய்வு செய்தனர்.

 

Tags : Thaveka District Secretaries ,Amma Canteen ,Villupuram ,Thaveka District ,Kushimohan ,Villupuram Park Street ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து