- திருவாரூர்
- டி.டி.வி.தீனகரன்
- சென்னை
- முத்துபேட்டை
- திருவாரூர் மாவட்டம்
- தனியார் தொலைக்காட்சி பிர
- ஹஜா முகைதீன்
- முத்துப்பேட்டை, திருவாரூர் மாவட்டம்
சென்னை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வசித்துவரும் தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் ஹாஜா முகைதீனின் இல்லத்திற்குள் புகுந்த போதைக் கும்பல் கொடூரமான முறையில் தாக்கியதில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கும் போதைக் கும்பல் நள்ளிரவு நேரத்தில் செய்தியாளர் ஒருவரின் இல்லத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாகத் தாக்கும் அளவிற்கான அசாதாரண சூழல் தவெக அரசின் மீது குற்றவாளிகளுக்குத் துளியளவும் பயமில்லை என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
உண்மைச் செய்திகளைத் துணிச்சலுடன் வெளியிடும் செய்தி நிறுவனங்களை அச்சுறுத்துவது, ஊழல் மற்றும் முறைகேடுகளை வெளிக்கொண்டு வரும் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்கள் நடப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய போதைக் கும்பலைக் கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, செய்தியாளர்கள் தங்களின் பணியில் சுதந்திரமாக ஈடுபடுவதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
