×

டூவீலர் விபத்தில் கண்டக்டர் பலி

 

சிங்கம்புணரி, மே 18: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் படமஞ்சி கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் அழகுராஜா(45). இவர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனையில் டவுன் பஸ் நடத்துனராக வேலை செய்து வந்தார். நேற்று படமஞ்சியில் இருந்து இருசக்கர வாகனத்தில் பொன்னமராவதி செல்லும் பொழுது உலகம்பட்டி அருகே சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் டூவீலர் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே அழகு ராஜா உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த உலகம்பட்டி போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Singampunari ,Palaniswami ,Azhugaraja ,S.Pudur Union ,Patamanji ,Ponnamaravathi Government Transport Workshop ,Pudukkottai district ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...