- டோனி
- பிரியாவிடை
- செபகக்
- சென்னை
- சென்னை சூப்பர் கிங்ஸ்
- ஐதராபாத்
- ஹைதெராபாத்
- செபக்கம்
- ஐபிஎல்
- சென்னை
- டோனி பீல
சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 62வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதுகின்றன. இந்த போட்டியில் சிஎஸ்கே முன்னாள் கேப்டன் டோனி களம் இறங்குவார் என தெரிகிறது. நடப்பு சீசனில் அவர் காயம் காரணமாக ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. இந்நிலையில் நாளை அவர் பிரியா விடை போட்டியாக ஆடக்கூடும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
44 வயதான டோனி தலைமையில் சிஎஸ்கே 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணிக்காக அவர் 250க்கும் மேற்பட்ட போட்டிகளில் ஆடி உள்ளார். நடப்பு சீசனில் சிஎஸ்கே, 6 வெற்றிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. எஞ்சிய 2 போட்டியில் வென்றாலும் மற்ற போட்டிகளின் முடிவை பொறுத்தே பிளே ஆப் வாய்ப்பு கிடைக்கும்.
