- பெங்களூரு எஃப்.சி
- சென்னை
- ISL பொருந்தி
- சென்னை எஃப்சி
- ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம்
- பெங்களூரு…
சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று, பெங்களூரு எப்சி அணி, 2-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்சி அணியை வீழ்த்தியது. சென்னை ஜவகர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் ஐஎஸ்எல் கால்பந்து போட்டி நேற்று நடந்தது. அதில் சென்னையின் எப்சி, பெங்களூரு அணிகள் மோதின. போட்டியின் 33வது நிமிடத்தில் சென்னை வீரர் டேனியல் சிமா சுக்வு முதல் கோல் போட்டார்.
அதற்கு பதிலடியாக பெங்களூரு அணியின் ரையான் வில்லியம்ஸ் 42வது நிமிடத்திலும், செர்டோ வொர்னெய்லென் கோம் 88வது நிமிடத்திலும் கோல்கள் போட்டனர். அதனால், 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இதில், சென்னை 9 புள்ளிகளுடன் 13ம் இடத்தையும் பெங்களூரு 23 புள்ளிகளுடன் முதலிடத்தை எட்டிப்பிடித்தது.
