×

கொடைக்கானல் பேரிஜம் ஏரி வனப்பகுதியில் ஹாயாக உலா வரும் புலிகள்: சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை

 

கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரி வனப்பகுதியில் புலிகள் உலா வருவதால், அந்தப் பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. இங்கு நட்சத்திர ஏரி, தூண் பாறை, குணா குகை, பேரிஜம் ஏரி வனப்பகுதி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. விடுமுறை மற்றும் கோடை மலர்க்கண்காட்சி நாட்களில் கூட்டம் களைகட்டும். தற்போது பள்ளி, கல்லூரி விடுமுறை விட்ட நிலையில், கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், நகரில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியமானதாக கருதப்படும் பேரிஜம் ஏரி வனப்பகுதியில் மதிகெட்டான் சோலை, தொப்பி தூக்கி பாறை, பயர் வாட்சிங் டவர் ஆகியவை இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளாகும். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வனத்துறை அனுமதி பெற்று கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும். பேரிஜம் ஏரிப் பகுதியில் கடந்த வாரம் யானைகள் முகாமிட்டிருந்தால், 4 நாட்களாக சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், பேரிஜம் ஏரிக்கு செல்லும் பிரதான சாலையில் 3 புலிகள் உலா வருவதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Haya ,Kodiakanal Barigam Lake ,Kodaikanal ,Forest Department ,Barijam Lake Forest ,Godaikanal ,Dindigul district ,Princess of the Hills ,
× RELATED ஆங்கிலேயர் காலத்தில் பின்பற்றப்பட்ட...