தென்காசி மீரான் மருத்துவமனையில் சலுகை கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை முகாம் துவக்கம்

தென்காசி, மார்ச் 2: தென்காசி மீரான் மருத்துவமனையில் சலுகை கட்டணத்தில் நவீன கருவிகளுடன் கூடிய முழு உடல் பரிசோதனை முகாம் நேற்று துவங்கியது. தொடர்ந்து வரும் 14ம் தேதி வரை நடக்கிறது. தென்காசியில் விரிவாக்கம் செய்யப்பட்ட மீரான்  மருத்துவமனையில் மார்ச் 1 முதல் 14ம் தேதி வரை தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரை நவீன கருவிகளுடன் கூடிய முழு உடல் பரிசோதனை முகாம் நடக்கிறது. இதில் டிஜிட்டல் எக்ஸ்ரே, இருதய சுருள் வரைபடம், ரத்த வகை பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு, முழு ரத்த கொழுப்பு பரிசோதனை, முழுமையான ரத்த அணுக்கள் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, சிறுநீரக ரத்தப்பரிசோதனை, கல்லீரல் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை ஆகிய சோதனைகளுக்கு ஆயிரம் ரூபாய் சலுகை கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் 14ம் தேதி வரை  சலுகை கட்டணத்தில் நடைபெறும் இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறும், முன்பதிவிற்கு 04633 222333 மற்றும் 8903189091 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுமாறும் மீரான் மருத்துவமனையின் இருதயம் நரம்பியல் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்  முகமது மீரான் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: